திருச்சி மாநகராட்சியில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசம்: அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாநகராட்சியில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசம்: அமைச்சர் கே.என்.நேரு
X

மக்கள் மன்றம் வாக்குச்சாவடியில் நகர்புற நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தனது வாக்கை பதிவு செய்தார். 

திருச்சி மாநகராட்சியில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என வாக்களித்த பின்பு அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லைநகரில் 22-வது வார்டுக்கு உட்பட்ட மக்கள் மன்றம் வாக்குச்சாவடியில் நகர்புற நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும். சேலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருச்சி மாநகராட்சியில் ரூ.1,300 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். திருச்சி மாநகராட்சியிலும் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நகர்ப்புற தேர்தல் முறையாக நடைபெறவில்லை என முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டி உள்ளது. தொடர்பான கேள்விக்கு, குறை கூறுவதால் தான் அவர் முன்னாள் முதல்வர் என்றார்.

மேலும், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கோவையில் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது. இந்த முறை திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் கோவையில் கைப்பற்றும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!