திருச்சி: வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி: வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர்  மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
திருச்சி நகரில் தொடர் குற்ற வழக்குகளில் கைதான 3 வழிப்பறி திருடர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவேரி நகரில் நடந்து சென்ற ஒருவரிடம் கடந்த மாதம் 17-ந் தேதி, கத்தியை காட்டி மிரட்டி வழிப் பறி செய்ததாக வழிப்பறி திருடன் தங்கமுத்து (வயது 27) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதே போல கண்டோன்மெண்ட் பாரதிதாசன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடம் செல்போன் பறித்து சென்ற ஷேக்தாவூத் (வயது 33), மன்சூர் அலி (28) ஆகியோரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் வழிப்பறி திருட்டில் கைதான தங்கமுத்து மீது ஏற்கனவே ஒரு வழக்கும், ஷேக் தாவூத் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 3 வழக்கும், மன்சூர் அலி மீது 2 வழக்குகளும் உள்ளன. மேலும் அவர்கள் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் ஓராண்டு ஜாமீனில் வெளி வரமுடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதை அவர் ஏற்று, மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தர விட்டார். அதன் பேரில் சிறையில் உள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகல் வழங்கப் பட்டது.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !