திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது

திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த  3 பேர் கைது
X
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாநகர் அரியமங்கலம் திடீர் நகர், கோல்டன் நகர் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், போதை மாத்திரைகளை விற்ற 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருச்சி வரகனேரி சந்தானபுரம் அசன்அலி (வயது 22), சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்த அகஸ்தியர் (வயது 22), அரியமங்கலம் காமராஜர் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த முஷரப் (வயது 20) என்பதும், இவர்கள் அந்த பகுதிகளில் சிறுவர்களிடம் போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வி.ஏ.ஓ. சூசை ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்