திருச்சி கோட்டை பகுதியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X
தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருச்சி இ.பி.ரோடு, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 38). இவர் திருச்சி டவுன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள ஒரு பிரிண்டிங் பிரஸில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இ. பி.ரோடு பகுதியிலுள்ள நாயுடு மகாஜன சங்க அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தபோது அவரது தம்பி லட்சுமணன் மீது இருந்த முன்விரோதத்தில் மாரியப்பனை அதே பகுதியில் உள்ள ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கண்ணாடியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து கோட்டை போலீசில் மாரியப்பன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 19) என்பவர் மீது கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
the future of ai in healthcare