டிரைவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் கடைக்குள் புகுந்தது திருச்சி பஸ்
திருச்சியில் கடைக்குள் புகுந்த நின்ற பஸ்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து புங்க னூர் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது.இந்த பஸ்சை மணப்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கணபதி (வயது 56) என்பவர் இயக்கினார்.இதில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் திருச்சி தலைமை தபால் நிலையம் தாண்டி அங்குள்ள ஆர்சி பள்ளி வேகத்தடை பகுதிக்கு வந்த போது டிரைவருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டு பஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்தது.பின்னர் சாலையோரம் உள்ள தொலைபேசி கம்பத்தை இடித்து க்கொண்டு அங்குள்ள கடைக்குள் புகுந்தது. காலை நேரம் என்பதால் அந்தக் கடைகள் பூட்டப்பட்டிருந்தது.
அதேபோன்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்கு காத்திருந்த பெண்களும் பஸ் தாறுமாறாக ஓடி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓடி தப்பினர்.பஸ் விபத்தில் சிக்கிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ஸ்டியரிங்கை பிடித்தபடி சாய்ந்து கிடந்த டிரைவரை மீட்டு திருச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் வேகத்த டையில் ஏறி இறங்கிய தனியார் பஸ் தாறுமாறாக ஓடி அங்குள்ள பெட்ரோல் பங்கில் புகுந்து விபத்து ஏற்படுத்தியது.இதில் அப்பகுதி ரயில்வே குடியிருப்பில் வசித்த ரயில்வே ஊழியர் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu