திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2543

திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2543
X

திருச்சி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இன்று அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2543 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2023 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு 2023-ஆம் ஆண்டிற்கான வாக்களாளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. அதன் முதன்மை பணியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்கு சாவடிகள் பட்டியல் இன்று 29.08.2022 காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்து அங்கீகாpக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரால் வெளியிடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் வாக்கு சாவடி விபரங்கள் பின்வருமாறு.

வ. எண், சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர் மொத்த வாக்காளர்கள் விபரம் மொத்த வாக்கு சாவடிகள் விபரம்

1 138-மணப்பாறை 283298 324

2 139-ஸ்ரீரங்கம் 306691 339

3 140-திருச்சிராப்பள்ளி மேற்கு 266706 270

4 141-திருச்சிராப்பள்ளி கிழக்கு 251347 255

5 142-திருவெறும்பூர் 294409 296

6 143-இலால்குடி 216899 249

7 144-மண்ணச்சநல்லூர் 245121 273

8 145-முசிறி 228081 260

9 146-துறையூர் (தனி) 222749 277

மொத்தம் 2315301 2543

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட 2543 வாக்கு சாவடிகளில் இருந்து வாக்கு சாவடி இடம்மாற்றம், பெயர் மாற்றம், கட்டிட மாற்றம்; மற்றும் மாவட்டத்தில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 12 வாக்கு சாவடிகளை இரண்டாக பிரித்தல் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அவற்றினை 07.09.2022 முதல் 14.09.2022-க்குள் சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் (வட்டாட்சியர் அலுவலகம்), வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம்(வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்) மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் எழுத்து பூர்வமாக கோரிக்கைகள் அளிக்கலாம் எனவும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் , பொதுமக்கள், குடியிருப்பு சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பிற வழிகளில் வரப்பெறும் மனுக்களை பரிசீலனை செய்து இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியல் 09.11.2022 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வைத்தியநாதன், தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings