திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,44,742

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,44,742
X

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை காட்டும் வரை படம்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,44,742 ஆக உள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 44 ஆயிரத்து 742 ஆகும்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 1,47,549 ஆண்வாக்காளர்களும், 1,57,312 பெண் வாக்காளர்களும் திருநங்கைகள் 47 என மொத்தம் 3,04,908 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 1,30,640 ஆண் வாக்காளர்கள், 1,40,984 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 33 என மொத்தம் 2,71,657 வாக்காளர்கள் உள்ளனர். திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1,22,7 20 ஆண் வாக்காளர்கள்,1,30,817 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 63 என மொத்தம் 2,53,600 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 1,31,023 ஆண் வாக்காளர்கள், 1,36,914 பெண் வாக்காளர்கள், 60 திருநங்கைகள் என மொத்தம் 2,67,997 வாக்காளர்கள் உள்ளனர். கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,01,3 96 ஆண் வாக்காளர்கள், 1,00,360 பெண் வாக்காளர்கள், 15 திருநங்கைகள் என 2,01,771 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,19,625 ஆண் வாக்காளர்கள், 1,25,161 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 23 என 2,44,809 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த வகையில் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,44,742 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 7,52,953,பெண் வாக்காளர்கள் 7,91,548,திருநங்கைகள் 241 உள்ளனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 38 ஆயிரத்து 595 பேர் அதிகமாக உள்ளனர்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது திருநாவுரக்கரசர் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். 74 வயதான இவருக்கு மீண்டும் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்பது ஆயிரம் மில்லியன் டாலர் கேள்வியாக தான் உள்ளது. காரணம் திருச்சி நாடாளுமன்ற தொகுதி இம்முறை காங்கிரசுக்கு ஒதுக்கப்படாது என்றே பேசப்பட்டு வருகிறது. தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டால் திருச்சி லோக்சபா தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் 22ம்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 22, 96,890 ஆகும்.

இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு , திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் தவிர மீதம் உள்ள லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியிலும், மணப்பாறை சட்டமன்ற தொகுதி மட்டும் கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும் இடம் பெற்று உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை திருச்சி மாவட்டத்தில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தங்களுக்கு தேவையான தொகுதிகளை பெறுவதில் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!