சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 வருடம் சிறைத்தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 வருடம் சிறைத்தண்டனை
X

திருச்சி நீதிமன்றம் (கோப்பு படம்)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 வருடம் சிறைத்தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் எதிரிகள் மீது பதிவு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 7 -9 -2020 ஆம் தேதி திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனது வீட்டின் அருகாமையில் விளையாட சென்ற தனது மகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக ஒரு சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் பேரில் ஜான் மேக்சிம் (வயது 40 )என்பவர் மீது கண்டடோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜான் மேக்சிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு ஜான் மேக்சிம் மீது கடந்த 11 -3 -2020ஆம் தேதி குற்றப்பத்திரிகை திருச்சி மயிலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது/ இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ வட்சன் நீதிமன்ற விசாரணை முடித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்ட ஜான் மேக்சிமிற்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜாகிர் உசேன் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அப்போதைய ஆய்வாளர் ஆனந்த வேதவல்லி ,புலன் விசாரணையில் உறுதுணையாக இருந்த காவல் ஆளிநர்கள் நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்ப்படுத்திய தற்போதைய கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் ஆய்வாளர் செல்வமலர் மற்றும் நீதிமன்ற பணிபுரிந்த காவல் ஆளிநர்களையும் மாநகர காவல் ஆணையர் காமினி பாராட்டி உள்ளார்.

Tags

Next Story
why is ai important to the future