/* */

திருச்சியில் டாஸ்மாக் பாரில் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் டாஸ்மாக் பாரில் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் டாஸ்மாக் பாரில் வழிப்பறி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது
X

டாஸ்மாக் கடையில் தகராறு செய்து அறிவாளால் தலையில் வெட்டி பணத்தை பறித்து சென்ற நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த 21 -5 -2024 ஆம் தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் இரவு மது குடிக்க சென்ற நபரிடம் வீண் தகராறு செய்து சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றவர்களை பிடிக்க முயன்ற நபரை அரிவாளால் தலை மற்றும் முகத்தில் வெட்டி விட்டு தப்பி சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்த ரவுடி அபிஷேக் (வயது20) மற்றும் மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் ரவுடி அபிஷேக் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லையில் கத்தியை காட்டி கொள்ளையில் ஈடுபட்டதாக ஒரு வழக்கும், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஒரு வழக்கு உட்பட ஏழு வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருப்பது தெரிய வந்தது.

எனவே ரவுடி அபிஷேக் என்பவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரிய வந்ததால் மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் நிிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிஷேக்கிடம் குண்டர் தடுப்பு சட்ட ஆணை இன்று சார்வு செய்யப்பட்டது. திருச்சி நகரில் கத்தியை காண்பித்து வழிப்பறி மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 16 May 2024 2:09 PM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...