திருச்சியில் கொட்டி தீர்த்த கோடை மழையால் அக்னி வெப்பம் தணிந்தது

திருச்சியில் கொட்டி தீர்த்த கோடை மழையால் அக்னி வெப்பம் தணிந்தது
X
திருச்சியில் கொட்டி தீர்த்த கோடை மழையால் அக்னி நட்சத்திர வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது.

கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஓரளவு பெய்த மழை வெப்பத்தை தணித்து உள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியிலும் இன்று மாலை 5 மணியளவில் திடீரென வானில் மேகங்கள் திரண்டன. சூறைக் காற்று வீசத்தொடங்கியது. வானில் மின்னல் வெட்டியது. இடி இடித்தது சிறிது நேரத்தில் மழை தூறத் தொடங்கியது.


அந்த மழை சிறிதுசிறிதாக கூடி பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் திருச்சி நகரின் பல இடங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பூமி குளிர்ந்தது. திருச்சியில் கடந்த ஒருவாரமாக வெயில் அளவு 100 டிகிரியில் இருந்து 106 டிகிரி வரை பதிவாகி இருந்த சூழலில் இன்று பெய்த இந்த கோடை மழை பூமியை குளிர்வித்ததால் அக்னி நட்சத்திரத்தின் வெப்பம் தணிந்து மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!