திருச்சி நகை கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

திருச்சி நகை கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
X
திருச்சி நகை கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

திருச்சியில் உள்ள நான்கு நகை கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்/

சென்னை பாரிமுனை என் எஸ் பி சாலை மற்றும் சௌகார்பேட்டையில் உள்ள ஐந்து நகை கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இந்த நகை கடைகளில் ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஒரு பிரிவினர் நேற்று நள்ளிரவு திருச்சிக்கு வந்தனர். அவர்கள் திருச்சி பெரிய கடை வீதி மற்றும் சின்ன கடை வீதி,ஜாபர்ஷா தெரு ஆகிய இடங்களில் உள்ள நான்கு நகைக் கடைகளில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை இன்று மதியம் வரை நீடித்தது. சோதனை நடந்தபோது பாதுகாப்புக்காக மத்திய துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை கடைவீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வருமானவரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே அளித்த தகவலின் அடிப்படையில் வரி ஏய்ப்பு தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !