குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயரிடம் மனு கொடுத்தார் கவுன்சிலர்
மேயர் அன்பழகனிடம் மனு கொடுத்தார் கவுன்சிலர் சுரேஷ்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சுரேஷ் குமார் மேயர் அன்பழகனிடமும், ஆணையர் முஜிபுர் ரகுமானிடமும் தனித்தனியாக ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் திருச்சி மாநகராட்சியின் '23 வது வார்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தினமும் 200 முதல் 300 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மகப்பேறு மருத்துவமும் பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மூன்று முதல் நான்கு குழந்தைகள் பிறப்பும் இங்கு நடக்கிறது.
ஆனால் இந்த மையத்தில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு போதுமான கட்டிட வசதி இல்லை. மேலும் பணியாளர்கள் ஓய்வறை, கழிப்பிட வசதியும் இல்லை.
ஆதலால் இந்த மையத்திற்கு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டி கழிப்பிட வசதி ஏற்படுத்துவதுடன், பணியாளர் ஓய்வறையும் கட்டித் தர பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu