திருச்சி ஜே.கே. நகரில் மழை நீர் வடிகால் கட்டும் பணி மீண்டும் துவக்கம்
திருச்சி ஜே.கே. நகரில் விடுபட்ட மழை நீர் வடிகால் கட்டும் பணியானது மீண்டும் துவங்கி உள்ளது.
திருச்சி ஜே.கே. நகரில் விடுபட்ட மழை நீர் வடிகால் கட்டும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி மண்டலம் நான்கு, 61 வது வார்டில் உள்ளது ஜே.கே. நகர். திருச்சி மாநகராட்சி பகுதியில் வளர்ந்து வரும் விரிவாக்க பகுதியில் ஒன்றான ஜே.கே. நகரில் ஏற்கனவே பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவுற்றுள்ளது. ஆனால் வீடுகளுக்கு இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை .
பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்ற அனைத்து தெருக்களிலும் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று தெருக்களில் மட்டும் இன்னும் சாலை அமைக்கும் பணி முடிவடையாமல் உள்ளது. மேலும் இரண்டு இணைப்பு சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில் ஜே.கே. நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் திருஞானம் தலைமையில் நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஜே.கே. நகர் மெயின் ரோட்டில் அதாவது விமான நிலையம் மற்றும் காஜாமலை பகுதியை இணைக்கும் சாலையில் மழை நீர் வடிகால் கட்டும் பணியானது பாதி முடிவடைந்த நிலையில் மீதி அப்படியே நிற்பதால் மழைக்காலங்களில் சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து அந்த சாலையில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதும் மழை நீருடன் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் புகுந்து விடுவதால் மக்கள் சிறிது மழை பெய்தாலும் அவதிப்படக்கூடிய நிலையில் இருப்பதாக மனு கொடுத்தனர்.
வார்டு கவுன்சிலர் ஜாபர் அலியும் இதுபற்றி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்து பேசினார். இந்த நிலையில் தற்போது ஜே.கே. நகர் மெயின் ரோட்டில் விடுபட்ட மழை நீர் வடிகால் கட்டும் பணியானது மீண்டும் துவங்கியுள்ளது. இந்த மழை நீர் வடிகால் வழியாகத்தான் காந்திநகர், ஆர் எஸ் புரம், ஆர் வி. எஸ் நகர், ராஜகணபதி நகர், பாரதி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மழைநீர் வடிந்து கொட்டப்பட்டு குளத்தில் சேகரமாவதால் இந்த மழை நீர் வடிகால் பணி மிக முக்கியமான பணியாக கருதப்படுகிறது.
இன்று ஏற்கனவே பணி முடிந்த இடத்தில் இருந்து மழை நீர் வடிகால் வாய்க்காலில் தேங்கி இருந்த கற்கள் மற்றும் மணல் உள்ளிட்ட கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu