திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
X

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி, மின்சார சட்ட திருத்த மசோதாவினை கைவிடக் கோரியும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் அறிவித்து இருந்தது.


இதனையொட்டி இன்று காலை 11 மணி அளவில் திருச்சி மாநகர் நந்தி கோவில் தெருவில் இருந்து மாநகர் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளரும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ் முன்னிலையில் துவங்கிய ஊர்வலத்தினை முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ் துவக்கி வைதது உரையாற்றினார்.

தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற மறியல் முற்றுகை போராட்டத்தில் பகுதி செயலாளர்கள் அபுதாஹீர் ,சுரேஷ் முத்துசாமி, முருகன், ராஜலிங்கம், அஞ்சுகம் தரைக்கடை சங்க செயலாளர் அன்சர்தீன் கட்டுமான சங்க செயலாளர் செல்வகுமார் மாணவர் பெருமன்ற செயலாளர் இப்ராஹிம் மாதர் சங்க நிர்வாகிகள் புஷ்பம், ஆயிஷா இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் முருகேசன் மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துலட்சுமி, சூர்யா, சண்முகம், பால் கிருஷ்டி 60 ஆண்கள் 40 பெண்கள் உட்பட உள்பட நூறு பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!