தை அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காவிரி ஆற்றில் குவிந்தமக்கள்
மகாளய அமாவாசையான தை மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காவிரிக்கரையில் பொதுமக்கள் குவிந்தனர்.
மகாளய அமாவாசையான தை மாத அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காவிரிக்கரையில் பொதுமக்கள் குவிந்தனர்.
மகாளய அமாவாசை எனப்படும் தை மாத அமாவாசை தினத்தில் கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்களது ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தை அமாவாசையான இன்று திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலையிலேயே ஏராளமான பொதுமக்கள் கூடினர்.
இந்த வருடத்தில் தை மாதத்திற்கான அமாவாசை இன்று பகல் 1.58 மணிக்கு தான் தொடங்குகிறது. நாளை 1-2-2022-ந்தேதி பகல் 12.02 மணிவரை அமாவாசை திதி உள்ளது. இரவு தங்கள் அமாவாசை இன்று வருவதால் ஏராளமானோர் இன்று காலையில் திருச்சி அம்மா மண்டபம் படித்துறை மற்றும் கருட மண்டபம் படித்துறைகளில் இதற்காக அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் வந்தவர்கள் தேங்காய், வாழைப்பழம், அருகம்புல், எள் போன்ற பொருட்களை கொடுத்து பூஜை செய்தனர்.
முன்னோர்களின் பெயர்களை கூறி புரோகிதர்கள் மந்திரங்கள் ஓதி வழிபாடு செய்த பின்னர் அந்த பூஜை பொருட்களை இலையில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். சிலர் பிண்டங்கள் செய்து அவற்றிற்கு பூஜைகள் செய்தும் தண்ணீரில் கரைத்தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் காவிரியில் புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை வழங்குவதும் புண்ணியமாக கருதப்படுவதால் பெண்கள் அகத்தி கீரை கட்டுகளை வாங்கி அவற்றை அந்த பகுதியில் இருந்த பசுமாடுகளுக்கு கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu