திருச்சியில் தற்காலிக செவிலியர்கள் கோரிக்கை-டீன் உடனடி நடவடிக்கை

திருச்சியில் தற்காலிக செவிலியர்கள் கோரிக்கை-டீன் உடனடி நடவடிக்கை

கோரிக்கை மனு அளித்த தற்காலிக நர்சுகள்.

திருச்சியில் தற்காலிக செவிலியர்கள் கோரிக்கையை ஏற்று டீன் உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு பணி வழங்கி உள்ளார்.

திருச்சி புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த கொரோனா நோய் தொற்று காலங்களில் தற்காலிகமாக 75 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களின் பணி காலம் நிறைவடைந்து விட்டதாக கூறி தற்காலிக செவிலியர்களை பணியிலிருந்து விடுவித்து விட்டனர். மீண்டும் தங்களை பணியமர்த்த கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக செவிலியர்கள் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த கோரிக்கை மனுவில்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் கொரோனா காலத்தில் ஆறு மாதகாலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக செவிலியர்களாக 75 பேர் பணியில் அமர்த்தப்பட்டோம். இந்நிலையில் எங்களின் பணிக் காலம் நிறைவடைந்து விட்டதாக கூறி பணியிலிருந்து விடுவித்து விட்டனர். தற்போது வேறு எந்த மாவட்டத்திலும் தற்காலிக செவிலியர்களை விடுவிக்காத நிலையில் திருச்சி அரசு மருத்துவ மனையில் எங்களை மட்டும் பணியில் விடுவித்துள்ளனர். மீண்டும் எங்களை திருச்சி அரசு மருத்துவ மனையில் பணியமர்த்த கோரியும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரி இருந்தனர்.

இதனை தொடர்ந்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா தற்காலிக செவிலியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளார்.


Tags

Next Story