மணப்பாறையில் மருத்துவ கழிவுகளை எரித்த தற்காலிக ஊழியர் உயிரிழப்பு

மணப்பாறையில் மருத்துவ கழிவுகளை எரித்த தற்காலிக ஊழியர் உயிரிழப்பு
X
மருத்துவ கழிவுகள் மற்றும் தீ பிடித்து இறந்த கலையரசன்.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை எரித்த தற்காலிக ஊழியர் சட்டையில் தீ பிடித்து உயிரிழந்தார்.

மணப்பாறை அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகளை எரித்த தற்காலிக ஊழியர் சட்டையில் தீ பிடித்து உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர்.

அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் பற்றி மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழ்மை நிலையில் வாழும் குடும்பம் என்ற நிலையில் கலையரசன் இந்த துயர சம்பவத்தில் இறந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சக ஊழியர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
உங்க Business முன்னேற்றம் அடைவதற்கான சிறந்த AI வழிமுறைகள்!