திருச்சியில் ஆசிரியர், மகளிர் ஊர்நல அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

திருச்சியில் ஆசிரியர், மகளிர் ஊர்நல அலுவலர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
X
திருச்சியில் நடந்த ஆசிரியர் மகளிர் ஊர்நல அலுவலர் சங்க கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
திருச்சியில் ஆசிரியர், மகளிர் ஊர்நல அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர், மேற்பார்வையாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட கூட்டம் தெப்பக்குளம் அருகில் உள்ள மதுரா நடுநிலைப்பள்ளியில் இன்று மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகி மணப்பாறை வரதராஜன் வரவேற்புரையாற்றினார்.இதில் மாநில இணை செயலாளர்கள் சாரதா, நல்லுசாமி, நாகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டம் வேண்டி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஸ்ரீரங்கம் குடல் வால்வு சிறப்பு மருத்துவர் குருபிரசாத் விருது வழங்கி வாழ்த்தி பாராட்டி சிறப்புரையாற்றினார்.

இதில் மாநிலத் தலைவர் மதுரை சங்கர் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறையில் 30 ஆண்டுகாலம் கல்வி சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு கல்வி செம்மல் விருதும்,

சமூக நலத்துறையில் திருமண உதவித்திட்டம், பெண்கள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்திய மகளிர் ஊர் நல அலுவலர், விரிவாக்க அலுவலர், மேற்பார்வையாளர்களுக்கு 30 ஆண்டு காலம் பணியாற்றிய மைக்கு வாழ்த்து தெரிவித்து, பாராட்டி சமூக செம்மல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.

Tags

Next Story
business ai microsoft