திருச்சியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்சியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
X
திருச்சியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்சி கே.கே.நகர் காஜாமலை காலனியை சேர்ந்த தனபாலன் அருள்தேவி தம்பதியின் மகள் தனப்பிரியா (வயது 19). இவர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் நடந்த தேர்வில் தனப்பிரியா குறைவான மதிப்பெண் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று வீட்டின் எதிரே இருந்த சிறுவனை அழைத்து பெட்ரோல் வாங்கி வரக்கூறியுள்ளார். தொடர்ந்து வீட்டு பாத் ரூமில் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் தீயை அணைத்து தனப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!