திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மது பான கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது

திருச்சி மாவட்டத்தில்  டாஸ்மாக் மது பான கடைகள் 3 நாட்கள் மூடப்படுகிறது
X

பைல் படம்.

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 15-ந் தேதி (திருவள்ளுவர் தினம்), 18-ந் தேதி (வள்ளலார் தினம்) மற்றும் 26-ந் தேதி (குடியரசு தினம்) ஆகிய 3 நாட்கள் அனைத்து சில்லரை மதுபான விற்பனை கடைகளும் மூடப்படுகிறது. மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (பார்) மூடப்படும். அத்துடன் எப். எல்.-1, எப்.எல்.-2, எப்.எல்.-3, எப்.எல்.-3ஏ, எப்.எல்.-3ஏஏஏ மற்றும் எப்.எல்.-11 பார்கள் அனைத்தும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும் அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சு. சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்