கரூர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயம்

கரூர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயம்
X

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு பேசினார்.

கரூர் மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பாக. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 (GM 2024) தெருமுனை பிரச்சார துவக்க விழா கரூரில் இன்று நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் துவக்கி வைத்து பேசினார். தொழில் புரிவோர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை வழங்கினார். இந்த நிகழ்விற்கு கரூர் எம்.பி.ஜோதிமணி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் கூறியதாவது:-

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்து பிரிவுகளிலும் பொருட்களை தயாரித்து வருகின்றன. இதில் முக்கியமானவை ஜவுளி, மின் மற்றும் மின்னணு பொருட்கள், பொறியியல் பொருட்கள், தானியங்கி மின் பொருட்கள். தோல் பொருட்கள். இரசாயன பொருட்கள்,ஆயத்த ஆடைகள் மற்றும் அலங்கார ஆபரணங்கள் ஆகும்.

கரூர் மாவட்டத்தில் தொழில் துவங்க முன்வருவோருக்கு ஏற்புடைய தொழில்களைக் கண்டறிதல், திட்ட அறிக்கையினைத் தயாரித்தல், நிதி உதவியினை பெற்றுத் தருதல், தொழில் துவங்க அரசின் பல்வேறு துறை சர்ந்த ஒப்புதல்களைப் பெற்று தருதல், அரசு மானியங்கள் மற்றும் ஊக்குவிப்பு தொகைகளை வழங்குதல், குறு மற்றும் சிறு தொழில் நிறுவன வசதியாக்கல் குழு மூலம் வாங்குவோரிடம் (Buyers) நிலுவையிலுள்ள தொகையினை பெற்றுத் தருதல் போன்ற பணிகளை கரூர் மாவட்ட தொழில் மையம் சிறப்பாக செய்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், கொசுவலை பின்னல் நிறுவனங்கள். விசைத்தறி நிறுவனங்கள். ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கான கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகிய நிறுவங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்கள் ரூ.5,000 கோடிக்கும் மற்றும் கொசுவலை ரூ.1,500 கோடிக்கும் வருடத்திற்கு ஏற்றுமதி மூலம் அந்திய செலவணியாக ஈட்டப்படுகிறது.

மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு இம்மாவட்டத்தில் கயிறு தொழில் புரிவோருக்கு உதவிடும் வகையில் பொது வசதி மையம் நிறுவிட ரூ.6.93 கோடி திட்ட மதிப்பீட்டில் கயிறு குழுமம் அமைப்பதற்கும், காகித அட்டை தொழில் புரிவோருக்கு உதவிடும் வகையில் பொது வசதி மையம் நிறுவிட ரூ.703 கோடி திட்ட மதிப்பீட்டில் கயிறு குழுமம் அமைப்பதற்கும் அரசாணைகள் பெறப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நஞ்சை காளக்குறிச்சி சிட்கோ தொழில் பேட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பாக கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் முருங்கை மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில்களுக்காக MORINGA PARK அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இந்த நல்வாய்ப்பியண் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் MORINGA PARK அமைப்பதால் 10000க்கும் அதிகமான கரூர் மாவட்டத்தை சார்ந்த முருங்கை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

கரூர் மாவட்டத்தில் 21,689 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 1,36,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கபட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட்(TNPL).EID Purry (India) Ltd. செட்டி நாடு சிமெண்ட் கார்ப்பரேசன் லிமிடெட் LGBALAKRISHNAN & Broe Lid ஆகிய பெருந்தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் தொழில் முனைவோர்கள் பெரிய நிறுவனங்களாக உருவாக்க முன்வரவேண்டும்.

தமிழகத்தை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் பொருட்டு உலக முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்க்கும் நோக்கத்துடன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. கரூர் மாவட்டத்திற்கு ரூ.2000 கோடியளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு அதனை செயல்படுத்தும் விதமாக இந்நிகழ்வு சிறப்பாக நடத்தப்படுகிறது. இது வரை கரூர் மாவட்டத்தில் ரூ1,52533 கோடி முதலீட்டில் 399 புதிய தொழில் நிறுவனங்கள் துவங்கபடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் 11,652 நபர்கள்: வேலைவாய்ப்பினைப் பெறுவர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள், குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர்கள். கரூர் மாவட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பிற மாவட்ட தொழில் முனைவோர்கள் ஆகியோர்கள் இதனை அரிய வாய்ப்பாக கருதி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரமேஷ், உதவி பொறியாளர் மனோஜ், வி.என். சி. பாஸ்கர். சி ஐ ஐ தலைவர் செந்தில் சங்கர். கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைமை பொது மேலாளர் சங்கரலிங்கம். கரூர் கைத்தறி ஏற்றுமதி தொழில் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் காளியப்பன். தி கரூர் வீவிங் பிட்டிங் சங்க தலைவர் தனபதி, கரூர் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கருணாநிதி, கரூர் மாவட்ட தேங்காய்: நார் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பூச்சாமி கரூர் மாவட்ட கொசுவலை சங்கத் தலைவர் மலையப்பசாமி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!