/* */

திருச்சியில் தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு

சாதிவாரி கணக்கெடுப்பை வீடு, வீடாகச் சென்று நடத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்

HIGHLIGHTS

திருச்சியில் தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு
X

தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 10-வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே இன்று நடந்தது

திருச்சியில் இன்று நடந்த தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 10-வது மாநில செயற்குழு கூட்டத்துக்கு, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் கே.கே.செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்கள் சம்பத், கணேசன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் தளவாய் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் வரவேற்றார்.

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய பரிந்துரைப்படி, முத்துராஜா, முத்தரையர் அம்பலக்காரர் (மாவட்டங்கள் நீங்கலாக) சேர்வை உட்பட முத்தரையர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் சீர்மரபினர் பட்டியலில் கொண்டுவந்து, வகுப்புவாரி விகிதாச்சார இட ஒதுக்கீடாக 10% வழங்க வேண்டும்.வகுப்புவாரி, விகிதாச்சார இடப்பங்கீடு கிடைக்க உதவக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பை வீடு, வீடாகச் சென்று நடத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

திருச்சி ஒத்தக்கடை சிக்னலில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலையை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அகற்ற முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். போக்குவரத்து நெரிசல் அற்ற பகுதியில் தேவையில்லாமல் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். வாரியத்திற்கு முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களை வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமித்து வாரியத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்துக்கு உள்ளாகும் போது உயிரிழந்த மீனவர்களுக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.5 லட்சமும், மாநில அரசு வழங்கிட முன்வர வேண்டும். 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி மதுரை மாவட்டம், வலையங்குளம் சந்திப்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவச் சிலையை நிறுவ வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் அமையவிருக்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டப கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முத்தரையர் சமூகத்தின் பாரம்பரியமும், பண்பாடுமான பாரிவேட்டை அனுமதி வழங்கிட வேண்டும். முத்தரையர் சமூகத்தில் இதுவரையில் சாதி மோதலால் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து தாக்குதலுக்கும், சாதி வன்கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்களை ஜாதி சொல்லி இழிவுபடுத்தும் செயலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே மத்திய அரசின் பாலகிருஷ்ணன் ரெங்கி 2008 கமிஷன் பரிந்துரையின்படி முத்தரையர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மாநில அரசு சம்மதிக்க வேண்டும்.

சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 வருடங்களுக்கு மேல் சிறையில் வாடும் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் தகுதியை ஆராய்ந்து விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். தனித்தொகுதிகளாக இருக்கும் கிருஷ்ணராயபுரம், நிலக்கோட்டை, துறையூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை பொது தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சென்னை புற வழிச் சாலைகளை இணைக்கும் திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சி அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில், மத்திய மண்டல பொறுப்பாளர் குணா, மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல், மாநில செய்தி தொடர்பாளர் ராஜா மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Sep 2021 6:27 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!