தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
![தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்](https://www.nativenews.in/h-upload/2022/03/15/1497556-vb.webp)
திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம நடத்தினர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசின் இந்த செயலுக்கு உறுதுணையாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் இன்று 15-ந்தேதி காலை 11 மணியளவில் திருச்சி மெகா ஸ்டார் தியேட்டர் எதிரில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராயல்ராஜா தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் பாரத் வரவேற்று பேசினார். புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் பிரணவேந்திரன், மாநகர் மாவட்ட துணை செயலாளர் முருகதாஸ், மாவட்ட துணை தலைவர் இரஞ்சித், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சரவணன், வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு,மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பாஸ்கர்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.முடிவில், மாவட்ட மாணவரணி செயலாளர் சரண்குமார் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கர்நாடக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu