திருச்சியில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு  இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம்
X

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க கூட்டத்தில் மாநில தலைவர் தியாகராஜன் பங்கேற்றார். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரசு சையது முர்துஸா அரசு தகைசால் மேல்நிலைப் பள்ளியில் சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது.

நிர்வாகிகள் வெங்கடேசன், கமலக்கண்ணன், ஸ்டீபன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சத்திய நாராயணன் வரவேற்றார்.

கூட்டத்தில் ஆண்டு அறிக்கையைபொதுச் செயலாளர் சங்கர் வாசித்தார். வரவு செலவு அறிக்கையை மாநில பொருளாளர் பிரகாசம் சமர்ப்பித்தார்.முடிவில் மாநில அமைப்பு செயலாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.கூடத்தில் தீர்மானங்களை பொதுச்செயலாளர் சங்கர் நிறைவேற்றினார்.

கூட்டத்தில் அரசு அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்த வேண்டும்.பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

பறிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் சி.பி.எஸ். ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

ஜாக்டோ ஜியோ சார்பாக நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முழுமையாக பங்கேற்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!