திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள் சங்க கூட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற சிறைப்பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சியில் நடந்தது.
திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற சிறைப் பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் எட்டாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். மேலும் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. முனிவேலு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருச்சி தலைவர் செந்தமிழ்செல்வன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடக்கு மாவட்டம் தலைவர் தங்கவேலு, மகாதேவன், கனக சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் கொரோனா காலத்தில் மறைந்த சிறைப் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மருத்துவப்படி ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வருவதுபோல தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்துவிட்டால் தமிழக அரசு வழங்கும் குடும்ப நல நிதி இழப்பீட்டு தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதை, ரூ. 5 லட்சமாக தமிழக அரசு வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறந்துவிட்டால் ஈமச் சடங்கிற்காக குடும்ப நல நிதியில் இருந்து உடனடியாக முன்பணமாக ரூ. 25 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் இறந்து விட்டால் இறப்பு சான்றிதழ் வாங்கினாலே கருவூலத்தில் ஏற்றுக்கொண்டு படிவம் 14-இல் உள்ள சிரமங்களை நீக்கி அடுத்த மாதமே குடும்ப ஓய்வூதியம் தாமதமின்றி கிடைக்குமாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையை 70 வயது முடிந்த மூத்த அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தில் ரூ. 10 சதவீதம் கூடுதலாக தமிழக அரசு வழங்க வேண்டும். ஓய்வூதிய ஒப்பளிப்பு தொகை பிடித்த காலத்தை 15 ஆண்டிலிருந்து 12 ஆண்டுகளாக தமிழக அரசு குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதில் துணைத் தலைவர் ஆறுமுகம், துணைச் செயலாளர் நாகையா, செயல் தலைவர் முருகேசன், தணிக்கையாளர் தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பொருளாளர் கணேசன் வரவேற்றார். முடிவில் செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu