திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கம் துவக்கம்

திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கம் துவக்கம்
X

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்க துவக்க விழா நிகழ்வில் மாநில தலைவர் அருள் ஜோஸ் பேசினார்.

திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் துவக்கப்பட்டு உள்ளது.

திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தலைவராக இருப்பவர் கே. கங்காதரன். இந்த சங்கத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளாக இருந்த பலரை கங்காதரன் தன்னிச்சையாக நீக்கம் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி நீக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் நடவடிக்கை குழு என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தில் 50 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என பலரும், 10 முதல் 15 ஆண்டுகள் பயணித்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் திருச்சியில் ஒரு கூட்டம் நடத்தி மாநில தலைவரின் சர்வாதிகார போக்கிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்

மேலும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தையும் தொடங்கியுள்ளனர். இந்த சங்கம் திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தை பதிவு செய்வது, துணை விதி தயாரிப்பது போன்ற பணிகளை செய்வதற்கு அதற்காக நியமிக்கப்பட்ட குழுக்கள் அப்பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவராக ப.அருள் ஜோஸ் (திருச்சி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக இருதயராசன் (சிவகங்கை) மாநில பொருளாளராக சந்திரசேகரன் (திருச்சி), மாநில துணைத்தலைவர்களாக முத்துலிங்கம் (சென்னை தெற்கு), ஜோசப் செல்வராஜ் (நெல்லை), திருவேங்கடம் (வேலூர்), அசோகன் (தேனி) ஆகியோரும், மாநில செயலாளர்களாக பாலகிருஷ்ணன் (திருச்சி வடக்கு), சின்னசாமி (தென்காசி), கிருஷ்ணமூர்த்தி (திருவள்ளூர்), நாகராஜன் (சென்னை வடக்கு) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிகள் உள்ளிட்ட சங்க துணை விதிகள் வகுக்கப்பட்டு அவை அடுத்து நடைபெற உள்ள பெருமளவு உறுப்பினர்கள் கொண்ட அவையில் ஏற்கப்பட்ட பின்னர் முறையான நிர்வாகிகள் தேர்தல் விதிமுறைகளின் படி அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போது ஆரம்பிக்கப்பட்ட புதிய சங்கத்தின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும், தாலுகாக்களிலும் அமைப்புகள் ஏற்படுத்துவது. மேற்கண்டவாறு ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் அமைப்புகள் ஏற்படுத்துகின்ற வகையில் மாவட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அமைப்பு கூட்டங்களை நடத்துவது, ஓய்வூதியர்களது தொடர்ந்து நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விரைவில் திருச்சியில் தர்ணா நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
உங்க Business முன்னேற்றம் அடைவதற்கான சிறந்த AI வழிமுறைகள்!