திருச்சியில் தமிழக வணிகர்கள் விடியல் மாநாடு- விக்கிரம ராஜா தகவல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி அளித்தார்.அருகில் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 39-வது வணிகர் தின மாநில மாநாடு திருச்சியில் தமிழக வணிகர் விடியல் மாநாடாக நடைபெற உள்ளது.இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மற்றும் அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாடு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் டோல் பிளாசா அருகில் 60 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட இருக்கிறது. மாநாட்டில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வணிகர்கள ஏராளமான அளவில் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாநாடு நடைபெற உள்ள சமயபுரம் டோல் பிளாசா அருகில் மாநாட்டு திடலில் பந்தல்கால் கால்கோள் விழா நடைபெற்றது.விக்கிரமராஜா தலைமையில் பந்தல்கால் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்றார்.தலைமை நிலைய செயலாளர் ராஜ்குமார்,திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .முடிவில் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu