திருச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் நிறுவனர் நாள் விழா

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்குஅருகிலுள்ள பெமினா ஓட்டலில் நிறுவனர் நாள் விழாவை நடத்தியது. இவ்விழாவில் திருச்சி டி.ஐ.ஐ.சி.யின் மண்டலமேலாளர் சகாதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிறுவனர் சண்முகம் செட்டியின் உருவப்படத்தை திருச்சி மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் செந்தில்குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் சண்முகம் செட்டியின் உன்னதசிந்தனைகள், தொலைநோக்கு பாரங்வை மற்றும் மகத்துவத்தை; பாராட்டிபேசினார். அவர் நமது நாட்டின் முதல் நிதி அமைச்சர் ஒரு தொலைநோக்குபொருளாதார நிபுணர், சோசியலிஸ்ட், வழக்கறிஞர் மற்றும் சிறந்தசொற்பொழிவாளர் தொழில் முதலீட்டு நிறுவனத் தலைவராகவும் இருந்தார் என்பதையும் நினைவு கூர்ந்தார். டி.ஐ.ஐ.சி.யின்கடன் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பாதுகாப்புக்கு வழித்தடம்,ஏரோ பேஸ், ரயில்வே போன்றவற்றில் கிடைக்கும் வாய்ப்புகளுடன் தங்கள்சந்தைகளை இணைக்கவும் தொழில ; முனைவோருக்கு அறிவுறுத்தினார்,
தமிழ்நாடு அரசு, வர்த்தக அமைப்புகள், இயக்குநர்கள் குழு,பங்குதாரர்கள் மற்றும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் ஆகியோரின் ஆதரவுடன் டி.ஐ.ஐ.சி.யானது 2023 மார்ச் 31 ஆம் தேதியின்படி ரூ.2535 கோடி சொத்துக்கள் நிர்வகிக்கும் நிறுவனம் என்ற இலக்கை அடைந்து மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 23.64 சதவீதம்இதுவரைஇல்லாத அதிகபட்ச நிகர லாபமாக ரூ.105 கோடிகள் (தோராயம்) என டிஐஐசி இன் 74 ஆண்டுகால வரலாற்றில்அதிகபட்ச சாதனைகள் எட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதுமாக 130475வாடிக்கையாளர்களையும் ரூ.23023 கோடிகளுக்கு கடன் அனுமதிக்கப்பட்டுநிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதி மட்டுமல்லதொழிற்சாலைகளுக்கான ஹப் மற்றும் இந்த மண்டலத்தில் 16632வாடிக்கையாளர்களையும் ரூ.1700 கோடி கடன் அனுமதிக்கப்பட்டு நிதியுதவிஅளிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சாதனைகள் என்பது டி.ஐ.ஐ.சி குடும்பத்தின்உறுப்பினர்களான பெருமைமிகு வாடிக்கையாளர்கள் உயர்வுக்கு,உறுதுணையாய் விளங்கும் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள், தொடர்ந்து இணைந்து செயலாற்றும் வங்கிகள் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும்பெருமைக்குரிய விஷயமாகும். இதனால் டி.ஐ.ஐ.சி.என்ற பிராண்ட் இப்போது நிதிஉலகில் புதியதொரு முத்திரை பதித்துள்ளதுஎன்றார்.
இந்நிகழ்ச்சியில் பிரான்சிஸ் நோயல், கிளை மேலாளர்சிட்கோ, திருச்சி, ஜி. பாலமுரளி, துணை பொறியாளர் சிப்காட் திருச்சி,ராஜப்பா, தலைவர் (பெல்சியா) கனகசபாபதி, திருச்சி வர்த்தக மையத் தலைவா் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu