திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மாநில பொதுக்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மாநில பொதுக்குழு கூட்டம்
X

திருச்சியில்  நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுக்குழு கூட்டம்.

திருச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. ராசி ஹாலில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலியமூர்த்தி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் இனிகோ இருநயராஜ் எம்எல்ஏ, உச்சநீதி மன்ற வழக்கறிஞர் ரவிசங்கர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு 2003-க்கு முன்னர் இருந்த நிலையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசில் பணி புரியும் அரசு அலுவலர்களுக்கு செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர் ஆசிரியர்களுக்கான அரசு அலுவலர் நலவாரியம் அமைக்க வேண்டும்.

ஜனவரி 2016 முதல் அமுல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.

தமிழக அரசு அலுவலர்களின் ஊதிய குறைபாடுகளை கலந்திட ஒரு நபர் குழு அமைத்திட வேண்டும். தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர் ஆசிரியர்களுக்கு தொழில் வரி ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசின் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் அரசு அலுவலர்களாக கருதிட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளரங்கு கூட்டத்திலேயே பதவி ஏற்றுக்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!