தமிழ்நாடு முன்னாள் கிராம அதிகாரிகள் உரிமை பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு முன்னாள் கிராம அதிகாரிகள் உரிமை பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு முன்னாள் கிராம அதிகாரிகள் உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாநில துணை தலைவர் விசுவநாதன், மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில், விவசாய சங்க மூத்த நிர்வாகிகள் ராஜாராம், தீட்சிதர் பாலசுப்பிரமணியன், தியாகி காந்திபித்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் ஓய்வுதியம் 80 வயது உடையவர்களுக்கு அரசு கொடுக்கும் 20 சதவிகிதம் சலுகை தங்களுக்கும் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
நாம் 5 ஆயிரம் பேரில் தற்போது சுமார் 2 ஆயிரம் பேர் தான் உள்ளோம். அனைவரும் வயது முதிர்ச்சியின் காரணமாக கஷ்டப்படுகிறோம். தங்களுக்கு அடிப்படை சம்பளத்தில் ரூ. 1000 மருத்துவப் படியில் கூடுதலாக ரூ.1,500-ஐ தமிழக அரசு சேர்த்து வழங்க வேண்டும்.
தங்கள் உறுப்பினர்கள் வயது முதிர்ச்சி காரணத்தால் அரசு பஸ்களில் இலவச பாஸ் வழங்க வேண்டும்.
தங்கள் சங்க உறுப்பினர்கள் இறந்தால் ஈமக்கடன் செலவை அரசு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை குடும்ப ஓய்வூதியம் பெறுகிறவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கடிதமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu