தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க திருச்சி மாவட்ட மாநாடு
தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்கத்தின் ஆறாவது மாவட்ட மாநாடு திருச்சி இனாம்குளத்தூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட6வது மாநாடு மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூரில் நடைபெற்றது .மாநாட்டிற்கு முன்னதாக கட்டுமான தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட செயலாளர் செல்வகுமார் துவக்கி வைத்தார்.
மாநாட்டு கொடியை மாவட்ட தலைவர் க.சுரேஷ் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாநாட்டு தலைமை குழுவாக வீராசாமி, மருதாம்பாள் ,சங்கரதாஸ் ஆகியோர் செயல்பட்டனர் . தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. இரங்கல் தீர்மானத்தை தோழர் துரைராஜ் முன்மொழிந்தார் .எஸ் முத்தழகு அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயலாளர் இரா. துரைசாமி கட்டுமான தொழிலாளர்களின் போராட்டம், நாம் பெற்ற உரிமைகள், அமைப்பு ரீதியாக செயல்பட வேண்டிய அவசியத்தை குறித்து வலியுறுத்தி பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள் .
மாவட்டச் செயலாளர் செல்வகுமார் அறிக்கை முன்வைத்து உரையாற்றினார். வரவு செலவு கணக்கு பொருளாளர் வீராச்சாமி சமர்ப்பித்தார் .பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பிறகு அறிக்கை ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கௌரவ தலைவர் க.சுரேஷ், தலைவர் எம் .ஆர். முருகன் ,பொதுச் செயலாளர் சி செல்வகுமார், பொருளாளர் பழனியப்பன் ,துணைத் தலைவர்களாக துரைராஜ் ,முத்தழகு ,முத்துலட்சுமி, பாலசுப்பிரமணி ,துணை செயலாளர்களாக வீராசாமி, இருதயசாமி ,மருதாம்பாள், சுமதி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாவட்டத் தலைவர் எம். செல்வராஜ் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாநாட்டு நிறைவுரையாற்றினார். தீர்மானங்களை எம் ஆர் முருகன் முன்மொழிந்தார். இறுதியாக இனாம் குளத்தூர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu