டி.ஜெயக்குமாருடன் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி சந்திப்பு

டி.ஜெயக்குமாருடன் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி சந்திப்பு
X
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமியுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் எம்.பி. ப.குமார்.
திருச்சியில் டி.ஜெயக்குமாரை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி சந்தித்து பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழக்கில் கைதான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி திருச்சியில் தங்கி இருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். அவரை பார்ப்பதற்காக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி இன்று திருச்சி வந்தார்.ஜெயக்குமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் எம்.பி. ப.குமார முனுசாமி மற்றும் ஜெயக்குமாருக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்தார். இதில் அ.தி.மு.க‌ நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story