திருச்சி சிறப்பு முகாமில் மறுவாழ்வுத்துறை ஆணையர் திடீர் ஆய்வு
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் அயலக தமிழர் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு நடத்தினார்.
திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறைச்சாலையில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இன்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப் குமார், ஆகியோர் இம்முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த முகாம்வாசிகளிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது மாநகர காவல் துணை ஆணையர் பா. ஸ்ரீதேவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu