பள்ளி கல்வி துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று (18.10.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் 14 வகையான நலத்திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.மாணவ மாணவிகளின் கல்வித்தரம்,அவர்களது உடல்நலம் மற்றும் மனநலன்கள் குறித்துவிரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பள்ளி செல்லா குழந்தைகள் இல்லா நிலையினை மாவட்டம் எய்துவதற்கு பள்ளி கல்வித்துறையினர் முழுஅளவில் முயற்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள் குறித்தும் பள்ளிகளில் அபாயகரமாக இருக்கும் அகற்றப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.மாணவ மாணவிகளின் சேர்க்கை, தேர்ச்சி குறித்தும்,உடல் ஊனமுற்ற மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளின் கற்றல் நடவடிக்கைகள் பற்றியும் அவர்களுக்கு மேலும் தேவைப்படும் சேவைகள் குறித்தும்,பள்ளி இல்லா குடியிருப்புகள் பற்றிய விபரமும் அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு கற்றல் நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்டத்தில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை குறித்தும்,அவர்களுக்கு அரசும் பள்ளிக் கல்வித் துறையும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.சிறையில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அரசின் சார்பாக எடுக்கப்படும் புதிய முயற்சிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.கட்டாயக் கல்விச் சட்டம், எண்ணும் எழுத்தும், பாரத எழுத்தறிவுத் திட்டம்,வானவில் மன்றம்,பள்ளிப் பார்வை, இடைநிற்கும் மாணவர்கள் நிலை முதலிய விபரங்கள் குறித்துமாவட்ட ஆட்சியரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார்,இலால்குடி இடைநிலை மற்றும் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர்களும் தனியார் பள்ளி மாவட்டக் கல்வி அலுவலரும், சமக்கிர சிக்ஷா திட்ட ஒருங்கிணைப்பாளர்களும்,வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வள மேற்பார்வையாளர்கள் பள்ளித் துணைஆய்வாளர்கள்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu