திருச்சியில் தெருநாயை கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற வாலிபர்கள்

திருச்சியில் தெருநாயை கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற வாலிபர்கள்
X

திருச்சியில் கொல்லப்பட்ட  தெருநாயை ஆட்டோவில் இழுத்து சென்றனர்.

திருச்சியில் தெருநாயை கல்லால் அடித்துக்கொன்று ஆட்டோவில் இழுத்து சென்ற வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள் மது போதையில் ஒரு தெருநாயை கல்லால் அடித்து கொன்று, ஆட்டோவில் அமர்ந்து கையில் பிடித்து கொண்டு சாலையில் இழுத்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியை சேர்ந்த புளூ கிராசை சேர்ந்த நிர்வாகி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வாலிபர்கள் 5 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!