திருச்சி பிரபல ஜவுளி கடையில் ரெடிமேட் துணிகள் திருடிய பெண் கைது

திருச்சி பிரபல ஜவுளி  கடையில் ரெடிமேட் துணிகள் திருடிய  பெண் கைது
X
திருச்சி பிரபல ஜவுளிக்கடையில் ரெடிமேட் துணிகள் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சியில் ஜவுளி விற்பனையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் உள்ள சாரதாஸ் ஜவுளி கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியை சேர்ந்த ஜீவிதா (வயது 39) என்பவர் ரெடிமேட் துணிகளை வாங்குவது போல் நடித்து அங்கிருந்த ரூ.6 ஆயிரத்து 40 மதிப்புள்ள 3 பேண்ட், 4 சட்டை, 3 டி-சர்ட்டுகளை தனது உடலில் வைத்து மறைத்து திருட முயன்றுள்ளார்.

அந்த காட்சியானது கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. இதனை கவனித்த சாரதாஸ் பணியாளர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இது குறித்து சாரதாஸ் மேலாளர் ரெங்கராஜ் (வயது 75) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் ஜீவிதாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!