திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் இராசங்கலிம், தலைமையில் மாநில பொதுச் செயலாளர் முனைவர் பாஸ்கரன், மாநிலப் பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வந்தவர்களை மக்கள் சக்தி இயக்கம் மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
1.உடல் உறுப்புகளைக் கொடையாக வழங்கும் மூளைச்சாவு அடைந்தவரின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ள ம தமிழ்நாடு முதலமைச்சரை இயக்கம் பாராட்டுவதோடு, அந்த தியாக குடும்பத்துக்கு நிதி உதவியோ, அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியோ வழங்க வேண்டும் என அரசை மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்துகிறது.
2.திருச்சி மாவட்டம் முசிறி அருகே காவிரி ஆற்றிலிருந்து துறையூர் வழியாக உபரிநீர் கால்வாய் அமைத்து பெரம்பலூர் மாவட்ட நீர் ஆதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
3.தமிழக அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்துகிறது.
4.அரசியலமைப்பு சட்டப்படி குடிமக்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஒன்றிய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் உச்சநீதி மன்றம் ஆராய்ந்து வழங்குகின்ற தீர்ப்புகளை மதித்து, குடியாட்சியின் மாண்பினைக் காப்பதில் அரசுகள் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
5.மாநிலங்களுக்கிடையிலான ஆற்றுநீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஒரே வழி, ஆறுகளை தேசியமயம் ஆக்குவதே.இதை ஒன்றிய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
6.பெரம்பலூர் மாவட்டத்திற்கு தஞ்சாவூர் , அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் வரை ரயில் பாதையும், பெரம்பலூரில் ரயில் நிலையமும் அமைக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
கூட்டத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில நிர்வாகிகள் திருச்சி ஆர். இளங்கோ, மதுரை அசோகன், கரூர் சுகுமார், தூத்துக்குடி வன்னிராஜ், சோமசுந்தரம், தஞ்சை முனைவர் ஜெயகுமார், முனைவர் செல்வகுமார், சீனிவாசன், கரூர் பிச்சைமுத்து, மகளிர் அணி சிவஜோதி, உலகம்மாள், திருச்சி குமரன், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள். முடிவில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu