திருச்சி மாவட்டத்தில் அரசு தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் எத்தனை பேர்?

திருச்சி மாவட்டத்தில் அரசு தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் எத்தனை பேர்?
X
திருச்சி மாவட்டத்தில் அரசு தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் எத்தனை பேர்? என்ற விவரத்தை கலெக்டர் சிவராசு வெளியிட்டு உள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் 05.05.2022 தொடங்கி 28.05.2022 வரையிலும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 10.05.2022 தொடங்கி 31.05.2022 வரையிலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.05.2022 தொடங்கி 30.05.2022 வரையிலும் நடைபெறவுள்ளது.

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை 15522 மாணவர்களும், 17599 மாணவிகளும் மொத்தம் 33121 பேர் எழுதவுள்ளனர். மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வினை 16811 மாணவர்களும், 17605 மாணவிகளும் மொத்தம் 34416 பேர; எழுதவுள்ளனர;.

இவர்கள் 126 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர;வு நடத்துவதற்கு 126 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 126 துறை அலுவலர;களும், 2134 அறை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 17713 மாணவர்களும், 17540 மாணவிகளும் மொத்தம் 35253 பேர் எழுதவுள்ளனர். இவர்கள் 165 தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வு நடத்துவதற்கு 165 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 165 துறை அலுவலர்களும், 2099 அறை கண்காணிப்பாளர்களும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தனித்தேர்வர்கள் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை 4 மையங்களிலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 5 மையங்களிலும் எழுதவுள்ளனர். மத்திய சிறைச்சாலையில் ஒரு மையத்தில் சிறை தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

தேர்வு நடைபெறும் மையங்களில் முறைகேடுகளை தடுப்பதற்கு 270 ஆசிரியர்கள் நிலையான, பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு நடைபெறும் நேரம் முழுவதும் மையத்திலேயே தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர;.

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர்கள் தன்னம்பிக்கையுடன் நன்முறையில் தேர்வினை எதிர்கொண்டு அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.


Tags

Next Story