திருச்சியில் இந்திய போக்குவரத்து பரிணாமம் குறித்த அஞ்சல் தலை கண்காட்சி
இந்திய போக்குவரத்து பரிணாமம் குறித்த அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டெலிக் கிளப் அஞ்சல் தலை கண்காட்சி அமர்வில் இந்திய போக்குவரத்தின் பரிணாம அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் முன்னிலை வகித்தார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வைத்தார்.அஞ்சல் தலை கண்காட்சி அமர்வில் அஞ்சல் தலை சேகரிப்பாளர் மகாராஜா இந்திய போக்குவரத்து பரிணாம வளர்ச்சி கருப்பொருளில் அஞ்சல் தலை சேகரிப்பினை காட்சி படுத்தி பேசுகையில், இந்திய அஞ்சவ் துறை, இந்திய போக்குவரத்து முறைகளின் பரிணாம வளர்ச்சியினை அஞ்சல் தலை தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
“இந்திய நாட்டில் போக்குவரத்து முறைகள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதை சித்தரிக்கும் 20 தபால் தலைகள், இந்தியாவின் வரலாறு, கலை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிட்டுள்ளது. அதில் பல்லக்குகள், விலங்குகளால் இயங்கும் வண்டிகள், ரிக்ஷாக்கள் பழங்கால கார்கள் மற்றும் பேருந்துகள், டிராம் மற்றும் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து உட்பட நான்கு முத்திரைகள் கொண்ட ஐந்து தொகுப்புகள் கொண்ட அஞ்சல் தலை இந்தியாவின் போக்குவரத்தின் பரிணாமத்தை சித்தரிக்கின்றன என்று விளக்கினார்.
துணைத் தலைவர் காசிநாத், பொருளாளர் தாமோதரன், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஜலால், தனம் ஜெயா, லட்சுமி நாராயணன், குத்புதீன், பிரேம்குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக இணைச்செயலாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu