2.5 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப எஸ்.ஆர்.எம்.யு. கோரிக்கை

2.5 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப எஸ்.ஆர்.எம்.யு. கோரிக்கை
X
பொன்மலை ரயில்வே பணிமனை முன் எஸ்ஆர்எம்யு துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் வாயிற்கூட்டம் நடந்தது.
2.5 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப எஸ்.ஆர்.எம்.யு. கோரிக்கை வைத்துள்ளது.

சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையா அகில இந்திய ரயில்வே தொழிற்சங்க தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று உள்ளார்.இதனை கொண்டாடும் விதமாக பொன்மலை இரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம். யூ தொழிற்சங்கத்தினர் வாயிற்கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் பேசுகையில் கண்ணையா இரண்டாவது முறையாக அகில இந்திய ரயில்வே தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சிக்குரியது ரயில்வேயில் காலியாக உள்ள 2.5 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்களை அவர்களது மாநிலத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். ரயில்வேயையும் அதன் சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.

Tags

Next Story
ai solutions for small business