திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தினர் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், உலக ரயில்வே தொழிலாளர்களின் எழுச்சி வாரத்தை கடைபிடித்து கடந்த 27-ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ,கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி கோட்ட ரயில்வே அலுவலக வளாகத்தில் இன்று எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட செயலாளருமான வீரசேகரன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் என்.பி.எஸ். முறையை ஒழித்து விடு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து, ரயில்வேயை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிடு, மானிடைசேஷன் என்ற பெயரால் ரயில்வே ,பொது துறை, அரசு சொத்துகளை விற்காதே, லேபர்கோடு உள்ளிட்ட நான்கு தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெறு, எஸ்மா என்ற ஆள் தூக்கிச் சட்டத்தை வாபஸ் பெறு, ரயில்வேயில் உள்ள 2.4 லட்சம் காலியிடங்களை உடனே நிரப்பு என்பது போன்ற கோஷங்களை இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் எழுப்பினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu