திருச்சியில் யாதவ மேம்பாட்டு கழகத்தின் ஸ்ரீராதா கிருஷ்ண திருமண விழா

திருச்சியில் யாதவ மேம்பாட்டு கழகத்தின் ஸ்ரீராதா கிருஷ்ண திருமண விழா
X

திருச்சியில் யாதவ மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ராதாகிருஷ்ண திருமண விழா நடைபெற்றது.

திருச்சியில் யாதவ மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஸ்ரீ ராதா கிருஷ்ண திருமண விழா இன்று நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணா யாதவ மேம்பாட்டுக்கழகம், ஸ்ரீகிருஷ்ணா யாதவ அறக்கட்டளை சார்பில் 31-ஆம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ராதா கிருஷ்ண திருமணவிழா நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் இன்று நடைபெற்றது.

தலைவர் என்.வி.தங்கமணியாதவ், செயலாளர் எம்.தமிழ்ச்செல்வம்யாதவ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிகழ்ச்சியின் முதலில் கோபூஜையும் அடுத்ததாக சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ராதாகிருஷ்ண திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடும்ப சகிதமாக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக ராதா கிருஷ்ணர் வேடமணிந்த குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சியும், ஆடல் பாடல் நிகழ்சியும் நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் திருமண விருந்து நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story