நிறைவு பெற்றது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா

நிறைவு பெற்றது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா
X

ஆளும் பல்லக்கில் ஸ்ரீரங்கம் வீதிகளில் வலம் வந்தார் ஸ்ரீநம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா நிறைவு பெற்றது

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா கடந்த மாதம் தொடங்கி நடந்து வந்தது. விழழவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 29ம் தேதி நடந்தது. அன்று நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இந்த சித்திரை விழா இன்று (01.05.2022) இரவு ஆளும் பல்லக்கு வீதி உலாவுடன் நிறைவடைந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் வலம் வந்து சேவை சாதித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!