ஸ்ரீரங்கம் மாசி திருவிழாவையொட்டி தெப்பத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் மாசி திருவிழாவையொட்டி தெப்பத்தில் எழுந்தருளினார்  நம்பெருமாள்
X

உபய நாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார் நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மாசி திருவிழாவையொட்டி தெப்பத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருப்பள்ளியோட திருநாள் எனப்படும் தெப்ப திருவிழா தொடங்கி நடந்து வந்தது.விழா தொடக்க நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார்.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று நடைபெற்றது. இதற்காக ஸ்ரீநம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடாகி தெப்பத்தில் எழுந்தருளினார். நம்பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளியதை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!