இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம்  பகுதி குழு மாநாடு
X
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் இந்திரஜித் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு மாநாடு நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகுதி குழு மாநாடு ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் பார்வதி, கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கிவைத்து மாநில நிர்வாக குழு உறுப்பினர் த. இந்திரஜித் உரையாற்றினார். பகுதி குழு செயலாளர் சொக்கி.சண்முகம் வேலை அறிக்கை சமர்ப்பிக்க ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரவுசெலவு முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 13 பேர் கொண்ட பகுதி குழு தேர்வுசெய்யப்பட்டது.

பகுதி குழு செயலாளராகச.பார்வதி, துணை செயலாளர்களாக கருணாகரன், சந்தோஷ். பொருளாளராக கண்ணன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.திராவிடமணி.மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கே.அண்ணாதுரை. பொன்னுதுரை,சிவா. பகுதி குழு செயலாளர்கள் சுரேஷ் முத்துசாமி,பிரான்சிஸ். கட்டுமானம் முருகன், மாதர் சங்கம் ஆயிஷா.அஞ்சுகம். மாணவர் பெருமன்றம் தினேஷ். இப்ராஹீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள குடிநீர் டேங்க் உடைந்துள்ளதால் மாற்று டேங்க் கட்டும்வரை சின்டெக்ஸ் வைத்து நோயாளிகளுக்குதண்ணீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!