பொன்மலை ரயில்வே பணிமனை முன் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொன்மலை ரயில்வே பணிமனை முன் எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரயில்வே தனியார் மயம் கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் தனியார் ரயில்சேவை அறிமுகப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் இரயில்வே தொழிலாளர்களுக்கான உத்தரவாதம் இல்லாத புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக மத்திய அரசை வலியுறுத்தி பொன்மலை ரயில்வே பணிமனை முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.ஆர். ஈ.எஸ். தொழிற்சங்க பணிமனைகோட்ட தலைவர் எல். பவுல் ரெக்ஸ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ரகுபதி முன்னிலையில் நிர்வாகிகள் பாலமுருகன், ஆசைதம்பி, ஞானசேகர், கோரி முகமது, சாம்சன், செல்வகுமார், ஜோசப் சேகர்,மதன்குமார், சிதம்பரம், வெங்கட் நாராயணன், சீனிவாசன், சேசுராஜா, ஜார்ஜ் ஸ்டீபன் , சுந்தர்ராஜன், சுந்தர் மற்றும் ஏராளமான இரயில்வே தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நிலுவையிலுள்ள 18 மாத பஞ்சப் படியை உடனடியாக அரியர்ஸாக வழங்கிட வேண்டும், பணிமனைகளில் தனியார்மயம் கண்டித்தும் கண்டன முழக்க கோஷம் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பினார்கள்.இந்த பெருந்திரள் ஆர்பாட்டத்தில் பொன்மலை ரயில்வே பணிமனை தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu