எதுமலை ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்பு

திருச்சி மாவட்டம் எதுமலையில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் எதுமலை ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தினை முன்னிட்டு நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு, முன்னிலையில் எதுமலை ஊராட்சித் தலைவர் பழனியாண்டி தலைமையில் இன்று (24.04.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு பார்வையாளராக பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஊராட்சி தலைவருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியினை எதுமலை ஊராட்சி தலைவரிடம் வழங்கி வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மக்களிடையே கலந்துரையாடி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த கிராம சபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் அனைவரும் நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர;
இக்கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசும்போது
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் அதிகப்படியான வகுப்புகளை கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி எதுமலையிலுள்ள அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். மேலும் நொச்சியத்திலிருந்து இருந்து ரூபாய் 84 கோடி மதிப்பீட்டில் எதுமலை உள்ளிட்ட 98 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படும். மேலும் ஊராட்சிக்கு தேவையான சாலை வசதி கழிப்பிட வசதி மயான வசதி,குளம் தூர்வாருதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், ஒன்றியக் குழுத் தலைவர் ஸ்ரீதர் எதுமலை ஊராட்சித் தலைவர் பழனியாண்டி, உதவி இயக்குனர; (ஊராட்சிகள்) கங்காதாரிணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu