திருச்சி சரகத்தில் திருடர்களிடமிருந்து 60 ஆடுகளை மீட்டது தனிப்படை

திருச்சி சரகத்தில் திருடர்களிடமிருந்து 60 ஆடுகளை மீட்டது தனிப்படை
X

பைல் படம்.

திருச்சி சரகத்தில் கடந்த 5 நாட்களில் ஆடு திருடர்களிடமிருந்து 60 திருட்டு ஆடுகளை தனி போலீஸ் படை மீட்டு உள்ளது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி) பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் (டி.ஐ.ஜி) சரவணசுந்தர் மேற்பார்வையில் கடந்த 23-11-2021-ந் தேதி ஆடு திருடும் நபர்களை பிடிப்பதற்காக 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 3 காவலர்களை உள்ளடக்கிய தனிப்படை திருச்சி சரக அளவில் அமைக்கப்பட்டது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆடு திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 நாட்களில் (23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை) திருச்சி சரகத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டு சம்பந்தமாக மொத்தம் 12 வழக்குகள் (திருச்சி -3, புதுக்கோட்டை - 8, கரூர்- 1) பதிவு செய்யப்பட்டு 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் மதிப்புள்ள 60 ஆடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் ஆடு திருடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருச்சி சரக தனிப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business