கிறிஸ்துமசையொட்டி திருச்சியில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
திருச்சி தேவாலயங்களில் நடந்த கிறிஸ்துமஸ் விழா
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறப்பு தினமான டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. உலகம்
முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள
தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.01 மணி முதல் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த வகையில் திருச்சி மேலப்புதூர், எடத்தெரு பழைய கோவில், சகாய மாதா ஆலயம், ஜோசப் கல்லூரி லூர்து அன்னை ஆலயம், மத்திய பேருந்து நிலையம், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர், உறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்வை கொண்டாடும் வகையில் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர்வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகளில் கேக் வெட்டி இயேசு கிறிஸ்து பிறப்பு கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை காரணமாக திருச்சி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றதால் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu