/* */

சிறப்பு ஒலிம்பிக் புது அத்தியாயம்: அமைச்சர்கள் துவக்கி வைப்பு

திருச்சி தேசிய கல்லூரியில் சிறப்பு ஒலிம்பிக் புது அத்தியாயத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் தொடங்கினர்.

HIGHLIGHTS

திருச்சி தேசியக் கல்லூரியில் சிறப்பு ஒலிம்பிக் புது அத்தியாயம் என்ற நிகழச்சி துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

சிறப்பு ஒலிம்பிக் செயலாளர் முனைவர் பிரசன்ன பாலாஜி வரவேற்புரை நிகழ்த்தினார். இல்லம் தேடி கல்வியுடன் இணைந்து இல்லம் தேடி விளையாட்டும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதனை உடனடியாக அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்ற செய்தியை மேடையிலேயே விளையாட்டுதுறை அமைச்சர் அறிவித்தார் .

பள்ளி கல்வித்துறை அமைச்சர் தேசியக் கல்லூரி சார்பில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்திய அளவில் சிறப்பு குழந்தைகள் கைப்பந்து விளையாட்டு அணி தேசியக் கல்லூரியில் தான் உள்ளது. விழாவின் நிறைவாக அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து டெல்டா மென்பொருள் நிறுவனம் தயாரித்துள்ள " நம்ம அன்பில் இ- சேவை மய்யம் " என்ற மென்பொருள் செயலி ஒன்றை வெளியிட்டனர்.

டெல்டா மென்பொருள் நிறுவன உரிமையாளர்கள் தர்மராஜ் மற்றும் வினோத் ப்ரியன் ஆகியோர் அதற்காக பாராட்டு பெற்றனர்.

Updated On: 1 Nov 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு